பாராளுமன்றத்தின் செயற்பாடுகளில் மந்த நிலை இருக்கிறதென்பது ஜனநாயகவாதிகளின் பெரும் கவலையாக இருக்கிறது. பிரிட்டிஷ் காலணித்துவ கால எச்சசொச்சங்களோடு நமது பாராளுமன்றமும் இயங்குகிறது. மிகவும் வினைத்திறனுடன் செயற்பட்டுவந்த நமது பெருமை மிகு பாராளுமன்றத்தின் அதிகார வரம்பில் ஏற்பட்ட அரசியல் அழுத்தங்களால் சற்று தளம்பல் நிலை ஏற்பட்டதென்பதை அரசியல் ஆய்வாளர்கள் மிகவும் வெளிப்படையாகவே ஒப்புக் கொள்கிறார்கள். 1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் கீழ் நிறைவேற்று அதிகாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.
நாடு சுதந்திரமடைந்ததிலிருந்து west minister முறைதான் நடைமுறையில் இருந்தது.
இதனை 'அமைச்சரவை அரசாங்க முறைமை' என்று தமிழில் கூறமுடியும். பிரதமர் தலைமையிலான பாராளுமன்றத்திற்கே நிறைவேற்று அதிகாரம் இருந்தது. ஆனால், 1978 இல் செய்யப்பட்ட அரசியலமைப்பு மாற்றம் ஜனாதிபதியிடமே அதிகாரத்தை வழங்கியது. ஆனால், நல்லாட்சி அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புக்கான 19ஆவது திருத்தம் ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைத்ததோடு, பாராளுமன்றத்துக்கு மீண்டும் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரத்தை வழங்கியிருந்தது.
இந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தெரிவிக்கப்பட்டு வரும் கருத்துக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவருடைய கருத்துக்கள் நாட்டின் யதார்த்தத்தை புரிய வைத்திருக்கிறது. வினைத்திறன் இழந்து கிடக்கும் பாராளுமன்றத்தை வினைத்திறனுடன் செயற்படுத்த பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டுமெனக் கூறுகிறார். சனத்தொகையில் 52 வீதமானவர்கள் பெண்கள். பாராளுமன்றத்தை செயல் திறனாக்க பெண்களின் எண்ணிக்ைக அதிகரிக்க வேண்டுமென்பது அவருடைய நிலைப்பாடு.
இக் கருத்தை சமூக ஆர்வலர்களும் பெண்ணியவாதிகளும் ஊடகவியலாளர்களும் உளமார வரவேற்கின்றனர். இது தொடர்பில் பெண் உரிமை ஆர்வலர்களிடம் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட போது...
உமாசந்திரா பிரகாஷ்
ஊடகவியலாளர், கொழும்பு மாநகர சபை உறுப்பினர்
பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் ஜனாதிபதியின் யோசனை வரவேற்கத்தக்கது.
ஒரு மாநகர சபை உறுப்பினராக இருந்து கொண்டு வினைத்திறனான உறுப்பினராக செயலாற்றுவதற்கான வழிகாட்டலையும் அதற்கான தலைமைத்துவத்தையும் கொடுத்தது என்னுடைய கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 25% பிரதிநிதித்துவ சட்டத்திருத்தம் இலங்கை அரசியலில் கிடைக்கப்பெற்ற ஒரு வரப்பிரசாதமாகும். 3 வீதமாக இருந்த பிரதிநிதித்துவம் 25 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ் அதிகரிப்புக்கு ஏற்ப மிக வினைத்திறனான பெண்களின் அரசியல் பங்களிப்பு இருக்க வேண்டும்.
பொதுவாக கட்சி பேதமில்லாமல் எவருக்கும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில் விருப்பம் கிடையாது. அரசியல் வரலாற்றில் இதுவரை குடும்ப அரசியலே மேலோங்கியுள்ளது. கணவன் அல்லது தந்தை இறக்கும் பட்சத்தில் அவர்களின் அனுதாப வாக்குகள் அல்லது அவர்களின் குடும்பத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லக்கூடிய பணியாகவே பெண்களுடைய அரசியல் பங்களிப்பு இருந்திருக்கிறது. எனவே, இலங்கையைப் பொறுத்தவரையில் மிக முக்கியமான ஒரு மாற்றம் தான் 25 வீதம் சட்டமாக்கப்பட்ட விடயம். எனவே அது எதிர்காலத்தில் எப்படி மாற்றமடையும் என்பது கேள்விக்குறியே. மாகாண சபை தேர்தல்களிலோ, பாராளுமன்றத்திலோ அந்த 25 வீதம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது தான் என்னுடைய நிலைப்பாடு. 25 வீதத்தை உள்ளூராட்சி சபைகளுக்கு வழங்கி விட்டு மாகாண சபைகளில் அல்லது பாராளுமன்றத்தில் அதை விட குறைவான தொகையை வழங்கும் போது அது பெண்களின் அரசியல் பிரவேசத்தில் பின்னடைவையே ஏற்படுத்தும்.
இதுவரையில் எந்தவொரு அரசியல் கட்சியும் தங்களினுடைய அரசியல் பிரதிநிதிகளாக பெண்களை தயார்படுத்தவில்லை. உள்ளூராட்சி சபைத் தேர்தல் காலப்பகுதியில் 25 வீத பெண்களின் பிரதிநிதித்துவம் தேவை என்பதற்காக பெண்கள் அவசர அவசரமாக சேர்க்கப்பட்டார்கள். இனிவரும் தேர்தல்களில் பெண்களை தயார்படுத்துவதற்கான பொறுப்பு அரசியல் சாராத நிறுவனங்கள், அமைப்புகள், பொது அமைப்புகள், பெண்கள் அமைப்புகளிடம் இருக்கிறது. எனவே அவ்வாறான முயற்சிகளை அவர்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றார்கள். எனவே இந்தவொரு ஆரம்பப்படி என்பது தொடர்ந்து முன்னேறிச் செல்லக்கூடிய ஒரு நிலைப்பாட்டை கொடுக்க வேண்டும்.
பொதுத்தேர்தல், மாகாண சபைத் தேர்தல்கள் பழைய முறையில் நடத்துவதா புதிய முறையில் நடத்துவதா என்பதெல்லாம் எங்களைப் பொறுத்தவரையில் பெரிய விடயமல்ல. ஆனால் பெண்களுக்கான விகிதாசாரம் பேச்சளவிலேயே இருக்கிறது. பெண்களின் அரசியல் பங்களிப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டிய தேவை அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சி சார்ந்தவர்கள், பொது மக்கள், ஜனாதிபதி, எல்லோருக்கும் இருக்கிறது. எனவே நாம் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றோம்.
நிச்சயமாக அரசியலில் பெண்களுடைய பங்களிப்பு தொடர்ந்தும் முன்னேற்றகரமாக இருக்க வேண்டும்.
நிச்சயமாக அரசியலில் பெண்களுடைய பங்களிப்பு தொடர்ந்தும் முன்னேற்றகரமாக இருக்க வேண்டும்.
தற்போது பாராளுமன்றத்தில் நடைமுறையில் இருக்கும் விடயங்களை வைத்து ஜனாதிபதி அவ்வாறான ஒரு கருத்தை முன் வைத்திருக்கலாம். ஜனாதிபதியின் கருத்தை நான் முழுமையாக ஏற்றுக்ெகாள்கின்றேன். அதை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்புதாரிகளின் அசமந்த போக்கினாலேயே உள்ளூராட்சி சபையில் பெண்களின் பிரதிநிதித்துவம் எதிர்பார்த்த இலக்கை எட்டவில்லை. ஜனாதிபதியின் கூற்றுப்படி பாராளுமன்றத்தில் 60 வீத பெண்களின் பங்களிப்புக்கு அரசியல் கட்சிகள் முனைப்பு காட்ட வேண்டும். சில நடைமுறை சாத்தியமான விடயங்கள் பேச்சளவில் நின்றுவிடுகிறது. நடைமுறை சாத்தியமாக்கப்படும் போது பல சிக்கல்கள் தோன்கிறது. இவற்றை வெற்றி கொண்டு முன்னோக்கி செல்ல வேண்டிய பாரி பொறுப்பு பெண்களிடம் சுமத்தப்பட்டுள்ளது. அதை செய்ய கூடிய சக்தியை பெண்கள் வளர்த்துக் கொண்டு நாட்டுக்கு சேவையாற்ற அரசியலில் பிரவேசிக்க வேண்டும்.
நளினி ரட்ணராஜா
சமூக ஆர்வலர், பெண்நிலை சிந்தனையாளர்
1931ம் ஆண்டு வாக்குரிமை பெற்ற காலத்திலிருந்து இன்று வரையும் பாராளுமன்றத்தில் 5.8 வீதத்தை தாண்டி பெண்களின் பங்களிப்பு இல்லை. ஆகவே பெண்களின் பங்களிப்பு அதாவது பெண்களின் பிரதிநிதித்துவம் அரசியலில் கட்டாயம் அதிகரிக்கப்பட வேண்டும். இதற்கு ஜனாதிபதியின் இந்த கூற்றை நான் முழுமையாக வரவேற்கிறேன். உள்ளூராட்சி மன்றத்தில் கொடுக்கப்பட்ட 25% ஒதுக்கீடு கூட சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
நிலைமை இவ்வாறிருக்கும் போது இது மாகாண சபைகளிலும் பாராளுமன்றத்திலும் கட்டாயமாக 33 வீத இட ஒதுக்கீட்டின் மூலம் பெண்களை ஆசனத்தில் அமரச் செய்ய வேண்டும். அதாவது, தீர்மானம் எடுக்கும் மட்டங்களுக்கும் சட்டங்களை உருவாக்கும் மட்டங்களுக்கும் அதை கண்காணிக்கவும் நடைமுறைப்படுத்தவும் எல்லாத் தரப்பிலும் எல்லா உத்தியோக மட்டங்களிலும் பெண்கள் இருக்க வேண்டும். ஏனென்றால் இலங்கையின் அந்நியச் செலாவணியை 100 வீதம் பெற்றுக் கொடுத்தது தேயிலைத் தோட்ட, இறப்பர் தோட்டத்தில் வேலை செய்யும் பெண்களும் மத்திய கிழக்கிற்கு வேலைக்குச் செல்லும் பெண்களும் தான். இவர்கள் தான் இலங்கையின் முதுகெலும்பாகவும் இருக்கிறார்கள்.
ஆனால் அரசியல் என்று வரும் பொழுது மிகவும் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். தெற்காசியாவை எடுத்துக் கொண்டால் இலங்கை கடைசியில் இருக்கின்றது. ஆப்கானிஸ்தான், நேபாளம், பங்களாதேஷிலும் கூட பெண்களின் பிரதிநிதித்துவம் கூட இருக்கின்றது. இதனை கவனத்தில் கொண்டு ஜனாதிபதி அவருடைய பதவிக் காலத்தில் பாராளுமன்றத்தில் இட ஒதுக்கீட்டை சட்டமாக்க வேண்டும். அரசியல் யாப்பினூடாக அவருடைய பதவிக் காலம் முடியும் முன்சட்டமாக்குதல் எங்களுக்கு மிகவும் உற்சாகத்தையும் வரவேற்பையும் தரக்கூடியதாக இருக்கும். இதை ஜனாதிபதி கட்டாயம் உத்தரவாதப்படுத்த வேண்டும். எப்படியென்றால் அரசியல் யாப்பினூடாக சட்டமாக கொண்டுவரப்பட வேண்டும்.
இந்த 25 வீதத்தையும் 3 மட்டங்களிலும் பாராளுமன்றம், மாகாண சபை, உள்ளூராட்சி மன்றங்களில் நடைமுறைப்படுத்தினாலே அது ஒரு பெரிய விடயம்.
தினகரன் - 23.09.2019
தினகரன் - 23.09.2019



Although could be} clearly lots to like about this on line casino app, there are quantity of} downfalls that you should be|you have to be|you should be} aware of before deciding whether or not to register. For instance, by utilizing sure strategies you will want to pay transaction fees and phrases of|in relation to} withdrawals you won’t be able to|be capable of|have the flexibility 카지노사이트 to} use cards like Visa and Mastercard. Proposition 26 provides a new new} method to implement sure state gambling laws, similar to laws banning sure kinds of card video games.
பதிலளிநீக்கு